
சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு!
மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மாநில மக்களை பாதுகாக்க, மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., அரசு தவறி விட்டது. காவல் துறை, அரசியல்வாதிகள் மற்றும் குண்டர்கள் இணைந்து, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கின்றனர்.
கைலாஷ் விஜய்வர்கியா
ம.பி., அமைச்சர், பா.ஜ.,
ஒத்துழைக்கவில்லை!
மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தீர்க்க, விரைவு சிறப்பு நீதிமன்றங்கள், போக்சோ நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்தது. இதற்கு திரிணமுல் அரசு ஒத்துழைக்கவில்லை.
அன்னபூர்ணா தேவி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
புகார் அளிப்போம்!
ஜார்க்கண்டில் சம்பாய் சோரன் முதல்வராக இருந்த போது, அவரை இரு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்து உள்ளனர். முதல்வரையே ரகசியமாக கண்காணித்த நிகழ்வு, தற்போது தான் நடந்துள்ளது. இது குறித்து நாங்கள் புகார் அளிப்போம்.
ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர், பா.ஜ.,

