ADDED : மார் 10, 2025 01:16 AM

தெலுங்கானா முதல்வராக காங்கிரசின் ரேவந்த் ரெட்டி பதவியேற்று, 14 மாதங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை மக்களுக்காக காங்., அரசு எதுவுமே செய்யவில்லை. எப்போது பார்த்தாலும், முந்தைய பாரத் ராஷ்ட்ர சமிதி அரசை மட்டுமே ரேவந்த் ரெட்டி குறை கூறுகிறார்.
கிஷன் ரெட்டி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
கர்நாடகாவுக்கு நல்லதல்ல!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் வெவ்வேறு பாதையில் பயணித்தால் அது மாநிலத்துக்கு நல்லதல்ல. இருவரும் ஒன்றாக பயணித்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். வளர்ச்சியை புறக்கணித்தால், மக்கள் நம்மை விரும்ப மாட்டார்கள்.
மல்லிகார்ஜுன கார்கே
தேசிய தலைவர், காங்.,
தனிநபரை விட கட்சி பெரியது!
கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எனக்கு எதிராக கூட்டம் நடத்தியது பற்றி எனக்கு கவலையில்லை. கட்சி வளர்ச்சி மட்டுமே எனக்கு முக்கியம். பா.ஜ.,வை பொறுத்தவரை, தனிநபரை விட கட்சி பெரியது. அதே போல, கட்சியை விட தேசம் பெரியது.
சி.டி.ரவி
மூத்த தலைவர், பா.ஜ.,