
சில தொகுதிகள் ஜெயிக்கலாம்!
ராகுல் தன் யாத்திரையின் போது எங்கெல்லாம் சென்றாரோ, அங்கு எல்லாம் காங்கிரஸ் தோல்வியே அடையும். அவரை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தால், சில தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஒற்றுமை தேவை!
காங்கிரசின் ஐந்து அம்ச உத்தரவாத திட்டங்கள், லட்சக்கணக்கான ஏழை குடும்பத்தினர் மற்றும் பெண்களின் பிரச்னையை போக்கும். ஒற்றுமையுடன் நாம் தேர்தலை சந்தித்தால், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறலாம்.
சித்தராமையா
கர்நாடக முதல்வர், காங்கிரஸ்
ராஜினாமா செய்திருக்க வேண்டும்!
நேர்மையான புதிய அரசியலை கொண்டு வருவதாகக் கூறிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றுள்ளார். உயர் நீதிமன்றம் அவரது முன் ஜாமினை ரத்து செய்த பின்னும், முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்யவில்லை.
சுதன்சு திரிவேதி
ராஜ்யசபா எம்.பி., -- பா.ஜ.,

