
கங்கனாவை அவமதித்து விட்டனர்!
ஹிமாச்சலின் மண்டியை சின்ன காசி என்று அழைப்பர். இங்கு போட்டியிடும் கங்கனாவையும், ஹிந்துக்களின் புனித ஊரான மண்டியையும், காங்., நிர்வாகி சுப்ரியா அவமதித்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். இதற்கு மக்கள் தக்க பதிலடி தருவர்.
ஜெய்ராம் தாக்குர்
மூத்த தலைவர், பா.ஜ.,
இது கூட்டு வெற்றி!
ஜவஹர்லால் நேரு பல்கலையின் மாணவர் அமைப்பின் முதல் தலித் தலைவராக தனஞ்சய் வெற்றி பெற்றிருப்பது பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினரின் கூட்டு வெற்றி. இந்த ஒற்றுமை பா.ஜ., வை வீழ்த்தியுள்ளது.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
உலகம் ஒரே குடும்பம்!
ஹோலி பண்டிகை, நல்லிணக்க சமுதாயத்தை நிறுவ துணை புரிகிறது. இன்று நம் சமூகம் பாதுகாப்பாகவும், வளமாகவும் இருக்கிறது. ஹோலி பண்டிகை சனாதன தர்மம் சொல்லும், உலகம் ஒரே குடும்பம் என்ற செய்தியை மையமாக கொண்டது.
யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர், பா.ஜ.,

