
கெஜ்ரிவாலின் இரட்டை வேடம்!
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து ராஜினாமாவை பெற்றார் கெஜ்ரிவால். தற்போது அதே வழக்கில் அவர் சிறை சென்ற போதும் முதல்வர் பதவியில் தொடர்கிறார்.
கவுரவ் பாட்டியா
செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
சர்வாதிகார கோட்டையில் விரிசல்!
அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங், பெரும் போராட்டத்திற்கு பின் விடுதலையாகி உள்ளார். சர்வாதிகார சக்திகளின் கோட்டையில் விரிசல் விழத் துவங்கிஉள்ளது. இது இண்டியா கூட்டணிக்கான வெற்றி.
கல்பனா சோரன்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
சீன இடங்களுக்கு பெயரிடுவோம்!
அருணாசல பிரதேசத்தில் உள்ள 30 பகுதிகளுக்கு சீனா பெயரிட்டு இருப்பதற்கு, இந்தியா பழிக்கு பழி அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். சீனாவின் திபெத் பகுதியில் உள்ள 60 இடங்களுக்கு நாம் பெயரிட வேண்டும்.
ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர்,
பா.ஜ.,

