
பெயர் வைத்தால் சொந்தமாகுமா?
சீனாவிடம் கேட்கிறேன், அண்டை நாட்டு மாகாணங்களின் பெயர்களை நாங்கள் மாற்றினால், அந்த பகுதிகள் எங்களுக்கு சொந்தமாகுமா? இது போன்ற நடவடிக்கைகளால் இந்தியா - சீனா இடையேயான உறவு தான் சீர்கெடும்.
ராஜ்நாத் சிங்
ராணுவ அமைச்சர், பா.ஜ.,
கஜானாவை திறக்க வேண்டும்!
மத்திய அரசு பணக்காரர்களுக்கு மட்டும் பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது. இந்த பணத்தை வைத்து, 100 நாள் வேலைத் திட்டத்தை, 24 ஆண்டுகளுக்கு நிதி வழங்க முடியும். கஜானாவை பொது மக்களுக்காக திறக்கும் நேரம் வந்துவிட்டது.
ராகுல்
காங்கிரஸ் - எம்.பி.,
ஆக்கிரமிக்க முடியவில்லை!
சீனா 1962ல் நம் நிலப்பரப்பை ஆக்கிரமித்த போது, அசாமுக்கும், அருணாச்சலுக்கும் 'பை பை' சொன்னவர் அப்போதைய பிரதமர் நேரு. ஆனால் இன்று, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் சீனாவால் ஒரு அங்குல இடத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

