தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : ஏப் 12, 2024 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2024 12:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்பகமான தலைவர்கள் இல்லை!

வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டளிப்பது என்பது, அராஜகம், ஊழல், பொருளாதார திவால், நிலையில்லாத ஆட்சிக்கு ஓட்டளிப்பதற்கு சமம். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். காங்கிரசில் நம்பகமான தலைவர்களே இல்லை.

எடியூரப்பா

மூத்த தலைவர், பா.ஜ.,

தெற்கில் எடுபடாது!

தென் மாநிலங்களில் இந்த முறை பா.ஜ., அதிக இடங்களை வெல்லும் என்ற செய்தியை, சிலர் கசியவிடுகின்றனர். பா.ஜ., பிரசார குழு தான் இதை தயாரித்துள்ளது. தெற்கு ஏற்கனவே அதிக வளர்ச்சி அடைந்த பகுதி என்பதால், இங்கு பா.ஜ.,வின் வளர்ச்சி பிரசாரம் எடுபடாது.

சசி தரூர்

லோக்சபா எம்.பி., -- காங்.,

உயிருடன் இருக்கும் வரை!

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றை நாங்கள் ஏற்க மாட்டோம். அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது.

மம்தா பானர்ஜி

மே.வங்க முதல்வர்,

திரிணமுல் காங்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us