
சி.ஏ.ஏ., ரத்து!
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது. பா.ஜ.,வினர் ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றி விடுவர். 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ., பொது சிவில் சட்டம், என்.ஆர்.சி., ரத்து செய்யப்படும்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
ஓட்டுரிமையை பறிப்பர்!
பா.ஜ.,வினர் இந்த லோக்சபா தேர்தலில் 400 தொகுதிகளைத் தாண்டுவோம் என்ற கோஷத்தை எழுப்பக் காரணம், அவர்கள் அரசியல் சாசனத்தை திருத்த விரும்புகின்றனர். நம் ஓட்டுரிமையைக் கூட பறித்து விடுவர். எனவே, இது ஜனநாயகத்தை காக்க வேண்டிய நேரம்.
அகிலேஷ் யாதவ்
உ.பி., முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி
முட்டாள்தனமான பேச்சு!
நானும், ராகுலும் அரசியலுக்கு தகுதியானவர்கள் இல்லை என ஹிமாச்சல், மண்டி தொகுதியின் பா.ஜ., வேட்பாளர் கங்கனா கூறியிருக்கிறார். அவர் முட்டாள்தனமாக உளறுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?
பிரியங்கா
பொதுச்செயலர், காங்கிரஸ்

