
எதிரிகளே புகழும் தலைவர்!
தலைவர் என்றால் எதிரிகளும் புகழும்படி இருக்க வேண்டும். அத்தகைய தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். இது நமக்கெல்லாம் பெருமை. பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பே, மோடி போன்ற ஒருவர் தன் நாட்டுக்கு தேவை என கூறி வருகிறார்.
மோகன் யாதவ்
மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,
மோடியா அல்லது ராகுலா?
மஹாராஷ்டிராவின் பாரமதி லோக்சபா தொகுதியில் நடக்கும் போட்டி, குடும்ப உறவுகளுக்கு இடையேயானது கிடையாது. இங்கு நடக்கும் போட்டி, மோடியா அல்லது ராகுலா என்பதற்கானது. இந்த தொகுதிக்கு நான் நிறைய செய்துள்ளேன்.
அஜித் பவார்
மஹா., துணை முதல்வர்,
தேசியவாத காங்.,
முதல் நாளிலேயே தோல்வி
பீஹாருக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பா.ஜ., அரசு நிறைவேற்றாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். முதற்கட்ட ஓட்டுப்பதிவு குறித்து வரும் கருத்துகள் எங்களுக்கு சாதகமாக உள்ளன. 400க்கு மேல் என்ற மோடியின் கோஷம், முதல் நாளிலேயே தோல்வி அடைந்துள்ளது.
தேஜஸ்வி யாதவ்
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

