
நெஞ்சம் பதறுகிறது!
கர்நாடகாவில் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா நுாற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். அவர் செய்த கொடூரமான குற்றங்களைப் பற்றி கேட்டாலே நெஞ்சம் பதறுகிறது.
பிரியங்கா
பொதுச்செயலர்,
காங்கிரஸ்
ஜாமினில் உள்ளனர்!
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ராகுல், சோனியா, சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, லாலு பிரசாத் யாதவ் என அனைவரும் ஜாமினில் வெளியே உள்ளனர். இவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள்; தங்கள் குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுவர்.
நட்டா
தேசிய தலைவர், பா.ஜ.,
ஓட்டுகள் வாயிலாக செய்தி!
இது, மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் ஆகியவை வெற்றி பெறுமா என்பது பற்றிய தேர்தல் அல்ல. இந்த தேர்தல் வாயிலாக, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை நாங்கள் ஏற்கவில்லை என்ற செய்தியை மக்கள் தெளிவாக சொல்ல வேண்டும்.
மெஹபூபா முப்தி
தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

