
இட ஒதுக்கீடு நீக்கப்படாது!
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பார்முலா உள்ளது.- சத்தமாக, வெளிப்படையாக பொய் பேசுவது. மீண்டும் மோடி பிரதமரானால் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார் என்று கூறுகின்றனர். மோடி இடஒதுக்கீட்டை நீக்கமாட்டார்; நீக்குவதற்கு அனுமதிக்கவும் மாட்டார்.
அமித் ஷா
மத்திய அமைச்சர், பா.ஜ.,
திடிரென உயர்ந்ததால் சந்தேகம்!
தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., எந்த நிலைக்கும் செல்லும் என்பதால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பவர்களின் விபரங்களை தேர்தல் கமிஷன் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஓட்டுப்பதிவு சதவீதம் திடீரென உயர்ந்ததும் சந்தேகத்தை கிளப்புகிறது.
மம்தா பானர்ஜி
மே.வங்க முதல்வர், திரிணமுல்
பழி வாங்கும் அணுகுமுறை!
பா.ஜ., இட ஒதுக்கீட்டை ஒழிக்க திட்டமிடுவதாக கூறப்படுவது குறித்து கேள்வி கேட்டதற்கு, மோடியும், அமித் ஷாவும் பழி வாங்கும் நடவடிக்கையாக டில்லி போலீசில் என் மீது வழக்கு பதிந்துள்ளனர். அதே போல் அரசியலமைப்பை மாற்ற மாட்டோம் என்றும் பொய் சொல்கின்றனர்.
ரேவந்த் ரெட்டி
தெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்

