
ஆட்டம் காணும் நாற்காலி!
மூன்று கட்ட லோக்சபா தேர்தல் முடிந்த பின், பிரதமர் மோடி தன் சொந்த நண்பர்களையே தாக்கி பேசுகிறார். மோடியின் பிரதமர் நாற்காலி ஆட்டம் காண துவங்கிவிட்டதை இது தெளிவாகக் காட்டுகிறது. இதுதான் தேர்தல் முடிவின் உண்மையான போக்கு.
மல்லிகார்ஜுன கார்கே
தேசிய தலைவர், காங்கிரஸ்
ராம ராஜ்யம் கேட்பதா?
ஓட்டு ஜிஹாத்தா அல்லது ராம ராஜ்யமா; எதை தேர்வு செய்யப்போகிறீர்கள் என பிரதமர் மோடி மக்களிடம் கேட்கிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதமர் இப்படி பேசலாமா? இதுபோன்ற பேச்சுக்கள், நம்மை வளர்ந்த நாடாக மாற்றாது.
கபில் சிபல்
ராஜ்யசபா எம்.பி., - சுயேச்சை
ஜூன் 4ல் புதிய அரசு!
இந்த முறை மோடி, பிரதமர் பதவியை இழக்கப் போவது உறுதி. பீஹார் மட்டுமின்றி நாடு முழுதும் இந்த சர்வாதிகார அரசை மக்கள் அகற்றப் போகின்றனர். ஜூன் 4ல், 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வரும் என முழு நம்பிக்கையுடன் உள்ளோம்.
தேஜஸ்வி யாதவ்
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்