
காங்கிரசுடன் சேர்ந்து அழியாதீர்!
ஜூன் 4க்கு பின், போலி தேசியவாத காங்கிரசும், போலி சிவசேனாவும் காங்கிரசுடன் இணையும் மனநிலையில் உள்ளன. காங்கிரசுடன் இணைந்து அழிந்து போவதற்கு பதில், அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே உடன் இணையுங்கள்.
நரேந்திர மோடி
பிரதமர்,
பா.ஜ.,
உ.பி.,யில் 'இண்டியா' புயல்!
இண்டியா கூட்டணியின் புயல் உத்தர பிரதேசத்தில் மையம் கொண்டுள்ளது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அனைத்தும் முடிந்துவிட்டது. மோடி இந்த முறை பிரதமர் ஆக முடியாது. உத்தர பிரதேசத்திலும் பா.ஜ., படுதோல்வி அடையும்.
ராகுல்
எம்.பி., -
காங்கிரஸ்
காஷ்மீரை பறிக்க முடியாது!
காங்கிரஸ் கட்சியினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி பேசுகின்றனர். பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்கின்றனர். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம். எந்த சக்தியாலும் அதை நம்இடமிருந்து பறிக்க முடியாது.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர்,
பா.ஜ.,