
தடுக்க முடியாது!
மத்திய அரசின் சட்டம் என்பதால், மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை, மம்தா பானர்ஜியால் ஒருபோதும் தடுக்க முடியாது. குடியுரிமை என்பது மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர்,
பா.ஜ.,
ஊழல்வாதிகளுக்கு சிறை!
காங்கிரசுக்கு துரோகம் செய்து பா.ஜ.,வில் இணைந்த ஊழல்வாதிகள் சிறையில் அடைக்கப்படுவர். ஹிமாச்சலில் காங்., வலுவாக உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில், முழு நம்பிக்கை உள்ளது.
சுக்விந்தர் சிங் சுகு
ஹிமாச்சல் முதல்வர், காங்.,
அஞ்சி நடுங்கும் பா.ஜ.,
தேர்தல் பிரசாரத்தில் நான் பங்கேற்க கூடாது என பா.ஜ., நினைத்தது. என்னை பார்த்து அக்கட்சி அஞ்சி நடுங்குகிறது. அதனால் என்னை பா.ஜ., சிறையில் அடைத்தது. இந்த தேர்தலில், அக்கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.
அரவிந்த் கெஜ்ரிவால்,
டில்லி முதல்வர்,
ஆம் ஆத்மி

