
ஆச்சரியமளிக்கிறது!
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிக்க, பாகிஸ்தானில் இருந்து ஹவாலா வாயிலாக பணம் பெறும் அப்னி கட்சிக்கு, பா.ஜ., ஆதரவளிக்கிறது. தங்களை தேசியவாதிகள் என கூறிக் கொள்ளும் பா.ஜ., தலைவர்களின் இந்த செயல் ஆச்சரியமளிக்கிறது.
மெஹபூபா முப்தி
தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
ஏற்புடையதல்ல!
புனே கார் விபத்தை அரசியலாக்குவது ராகுலுக்கு ஏற்புடையதல்ல. எல்லாவற்றையும் ஓட்டு அரசியல் கோணத்தில் பார்ப்பது சரியல்ல. அவர் சரியான தகவலை பெற்றிருந்தால், இது போன்ற கருத்தை தெரிவித்திருக்க மாட்டார்.
தேவேந்திர பட்னவிஸ்
மஹாராஷ்டிர துணை முதல்வர், பா.ஜ.,
குறியாக இருக்கிறது!
பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதில் குறியாக இருக்கிறது. 10 ஆண்டுகளில் பார்லிமென்ட், நீதித் துறை போன்ற அமைப்புகளை அக்கட்சி பலவீனப்படுத்தி உள்ளது. இவற்றை பாதுகாக்க காங்., உறுதி பூண்டுள்ளது.
பிரியங்கா
பொதுச்செயலர், காங்.,

