
தகுதியில்லாதவர் ராகுல்!
பிரதமர் ஆவேன் என ராகுல் கனவு காண்கிறார். ஆனால் காங்., செல்வாக்கு செலுத்திய அமேதி தொகுதியிலேயே அவருக்கு போட்டியிட தைரியம் இல்லை. அவருக்கு அரசியல் அனுபவம் போதாது. பிரதமரின் முன் குண்டூசி அளவு கூட தகுதியில்லாதவர்.
மோகன் யாதவ்
ம.பி., முதல்வர், பா.ஜ.,
ஜிகாதிகளுக்கு ஆதரவு!
நிலம், நீர், வனம் தொடர்பான பிரச்னைகளை முன் வைத்து, ஆட்சிக்கு வந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, நில ஜிகாத் மற்றும் லவ் ஜிகாத்தில் ஈடுபடும் சக்திகளுக்கு ஆதரவாக உள்ளது. இவர்கள் ஆட்சியில் மணல் மற்றும் நிலங்கள் கொள்ளை போகின்றன.
நட்டா
தேசிய தலைவர், பா.ஜ.,
பா.ஜ., வாஷிங் மெஷின்!
நாரதா ஊழல் வழக்கில் தொடர்பு இருப்பதாக, அப்போது திரிணமுலில் இருந்த சுவேந்து அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்தது. 2020ல் பா.ஜ.,வில் சேர்ந்த பின் அவர் மீது நடவடிக்கை இல்லை. பா.ஜ., வாஷிங் மெஷின் அவரை துாய்மையாக்கியதா?
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்கிரஸ்