தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : ஜூன் 21, 2024 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2024 12:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செயலிழந்த தேர்வு முகமை!

நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பை மத்திய அரசு சீரழித்துள்ளது. அதன் உதாரணங்கள் தான், 'நீட், க்யூட் மற்றும் யு.ஜி.சி., நெட்' தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, தேர்வு மோசடி ஆகியவை. தேசிய தேர்வு முகமை முற்றிலும் செயலிழந்து உள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே

தலைவர், காங்கிரஸ்

தண்டனை நிச்சயம்!

டில்லி மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீரை, முதல்வர் கெஜ்ரிவால் டேங்கர் மாபியாவிடம் ஒப்படைத்துவிட்டார். டில்லியில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றது குறித்து அவர் கவலைப்படவில்லை. இதற்காக மக்கள் அவரை தண்டிப்பர்.

மனோஜ் திவாரி

தலைவர், டில்லி பா.ஜ.,

பால் தாக்கரேவை மறந்தனர்!

மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வெற்றி பெற, காங்கிரஸ் ஓட்டு வங்கியே காரணம். ஓட்டுக்காக பால் தாக்கரேவின் கொள்கைகளை மறந்து, இண்டியா கூட்டணியில் இருக்கின்றனர். அதனாலேயே நாங்கள் பிரிந்தோம்.

ஏக்நாத் ஷிண்டே

மஹாராஷ்டிரா முதல்வர்,

சிவசேனா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us