
தோல்வியை மறைக்கும் அரசு!
ஹாத்ரஸ் சம்பவத்தில் நுாற்றுக்கணக்கான மக்களின் மரணத்திற்கான பொறுப்பை உ.பி., அரசு தட்டிக்கழிக்க பார்க்கிறது. சம்பவ இடத்தில் இல்லாத சம்பந்தம் இல்லாத நபர்களை கைது செய்து உள்ளது. இந்த நிகழ்வில் இருந்து யாரும் பாடம் கற்கவில்லை என்றால், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் தொடரும்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
குஜராத்தில் தோற்கடிப்போம்!
பா.ஜ.,வினர் குஜராத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை எப்படி அயோத்தியில் வீழ்த்தினோமோ, அதே போல் குஜராத் சட்டசபை தேர்தலில் வீழ்த்துவோம்.
ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்,
காங்கிரஸ்
பகல் கனவு காண்பதா?
மத்தியில் ஆட்சி கவிழும் என லாலு பிரசாத் யாதவ் பகல் கனவு காணுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த பலம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அப்படியே தொடரும். பிரதமர் எடுக்கும் முடிவுகளுக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்கும்.
சிராக் பஸ்வான்
மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி