
பயங்கரவாதிகளுக்கு இரண்டு இடம்!
ஜம்மு - காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு, பா.ஜ., ஆட்சியில் இரண்டு இடங்கள் தான் உள்ளன. ஒன்று சிறைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் நரகத்துக்கு அனுப்பப்படுவர். கடந்த சில தினங்களில் மட்டும் 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் பயங்கரவாதத்தை வைத்து அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது.
நித்யானந்த் ராய்
மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,
தினக்கூலியை ரூ.400 ஆக்குங்கள்!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பலவற்றை காப்பி அடித்து பட்ஜெட்டில் சேர்த்துள்ளனர். குறைந்தபட்ச தினக்கூலி 400 ரூபாய், மார்ச் வரையிலான கல்வி கடன்கள் ரத்து, நீட்டை எதிர்க்கும் மாநிலங்களுக்கு அவற்றில் இருந்து விலக்கு, அக்னிபாத் திட்டம் ரத்து என இவற்றையும் காப்பி அடித்து உங்கள் திட்டங்களில் சேர்க்கவும்.
சிதம்பரம்
மூத்த தலைவர், காங்கிரஸ்
கையால் மலம் அள்ளுவது ஒழிப்பு!
கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டில் கையால் மலம் அள்ளும் நடைமுறை குறித்த எந்த அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, தங்கள் மாவட்டத்தில் கையால் மலம் அள்ளும் முறை இல்லை என அறிவிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
ராம்தாஸ் அத்வாலே
மத்திய அமைச்சர்,
இந்திய குடியரசு கட்சி

