
காங்கிரசின் மரபணு!
விவசாயிகளுக்கு எதிரான மனநிலை காங்கிரசின் மரபணுக்களிலேயே ஊறிய ஒன்று. மத்திய அரசு விவசாயிகள் நலன்களுக்கு எதிரானது என்று அவர்கள் பேசுகின்றனர். மோடி ஆட்சியில் தான் விவசாய துறைக்கான பட்ஜெட் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இழப்பீடுகள் அதிகரிக்கப்பட்டன.
சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
பொய் பேசும் அரசு!
மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சர் பி.எல்.வர்மா பார்லிமென்டில் அளித்த பதிலில், இடஒதுக்கீட்டை அதிகரித்தால், அதை அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பது, மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது என பொய் தகவல் கூறியுள்ளார். அது மத்திய அரசின் பொறுப்பு.
தேஜஸ்வி யாதவ்
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
கதை சொல்லாதீர்!
லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேள்விகளை மட்டும் கேளுங்கள். அதை விட்டுவிட்டு கதை சொல்லாதீர். அதனால் சபையின் நேரம் விரயமாகிறது. சபையில் மகாபாரதம் படிப்பது தற்போது அதிகரித்துள்ளது. அதை குறைத்துக்கொள்வது அனைவருக்கும் பலனளிக்கும்.
ஓம் பிர்லா
லோக்சபா சபாநாயகர்