
ராகுலின் வாழ்த்தை கவனியுங்கள்!
வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் படி வலியுறுத்தினார். ராகுலும் வங்கதேச அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால் ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்து எதுவும் கூறவில்லை.
அனுராக் தாக்குர்
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
காஷ்மீரில் விரைவில் தேர்தல்!
ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. அதற்கான பணிகளில் நாங்கள் இறங்கியுள்ளோம். எந்த சக்தியும் தேர்தலை சீர்குலைக்க விடமாட்டோம். அப்படிப்பட்டவர்களுக்கு காஷ்மீர் மக்கள் தக்க பதிலடி தருவர்.
ராஜிவ் குமார்
தலைமை தேர்தல் கமிஷனர்
மிகப்பெரும் சக்தி இந்தியா!
அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும். ஜாதி, மதத்திற்கு முன்னுரிமை தராமல், தேச நலனுக்கு முன்னுரிமை தந்தால், உலகின் எந்த சக்தியாலும் நம் வளர்ச்சியை தடுக்க முடியாது.
யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச முதல்வர்,
பா.ஜ.,

