
பாதுகாப்புடன் உள்ளனர்!
ராகுல் எவ்வளவு தான் முயன்றாலும் இந்தியாவை இழிவுபடுத்த முடியாது. சிறுபான்மையினர் இந்தியாவில் தான் பாதுகாப்புடன் உள்ளனர். இந்திய அரசியலமைப்பு மற்றும் கலாசாரம் மக்களை வேறுபடுத்துவதில்லை. நெருக்கடி நிலையின் போது தான் அரசியலமைப்பும், பார்லிமென்டும் முடக்கப்பட்டன.
கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர், பா.ஜ.,
காரணத்தை கண்டறிய வேண்டும்!
ஹிமாச்சல் அமைதியான மாநிலம். அங்கு சஞ்சவ்லியில் சட்டவிரோதமாக மசூதி கட்டப்பட்டதாக கூறி மக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் கோபத்திற்கான காரணம் குறித்து கண்டறிய வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது.
அனுராக் தாக்குர்
லோக்சபா எம்.பி., பா.ஜ.,
மோடிக்கு எதிராக போராடுவேன்!
ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்த பின் நான் வலிமையாக உணர்கிறேன். மோடியின் புதிய காஷ்மீர் பிரசாரம் லோக்சபா தேர்தலில் படுதோல்விஅடைந்தது. சட்டசபை தேர்தலிலும் அவரை எதிர்த்து போராடுவேன். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை மக்கள் ஏற்கவில்லை.
'இன்ஜினியர்' ரஷீத்
லோக்சபா எம்.பி., சுயேச்சை

