
100 நாள் ஆகப்போகிறதே!
பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து பெருமையாக பேசினார். தற்போது மோடி அரசு பொறுப்பேற்று, 95 நாட்கள் கடந்துள்ளன. கூட்டணி அரசின் ஊசலாட்டத்தால், நாடு மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
நாங்கள் தான் போராடுகிறோம்!
காஷ்மீர் மக்களின் அடையாளம், இந்த மண்ணின் வளங்கள் மற்றும் இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் மீதான பா.ஜ.,வின் தாக்குதலை எதிர்த்து போராடக்கூடிய ஒரே கட்சியாக, மக்கள் ஜனநாயக கட்சி மட்டுமே உள்ளது. பா.ஜ., பொய் சொல்வதற்கு அஞ்சாத கட்சி.
மெஹபூபா முப்தி
தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
நாட்டை காட்டி கொடுப்பவர்!
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அமெரிக்காவில் நம் நாடு குறித்து முன்வைத்த பிம்பத்தால் ஒட்டுமொத்த நாடும் புண்பட்டுள்ளது. தேசத்தை காட்டி கொடுத்துள்ளார் ராகுல். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்; அவர் தலைவராக இருக்கும் வரை காங்கிரஸ் எழுச்சி பெறாது.
சம்பித் பத்ரா
செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

