
100 நாட்களில் தோல்வி!
மத்திய அரசு, 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. நாட்டில் நிலவும் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை பிரச்னையை சமாளிப்பதில் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது. பிரதமரின் பொருளாதார கொள்கை பெரிய நிறுவனங்களுக்கு தான் சாதகமாக உள்ளது.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்கிரஸ்
கடவுள் முடிவெடுக்கவில்லை!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, கடவுளின் முடிவு அல்ல. பார்லிமென்ட் எடுத்த முடிவு. இதை மாற்ற முடியும். சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தால், எதிராக ஏழு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளிக்க முடியாதா?
ஒமர் அப்துல்லா
தலைவர், தேசிய மாநாட்டு கட்சி
முதல்வர் ஆசை இருக்கிறது!
எல்லோரும் தங்கள் தலைவர் முதல்வராக வேண்டும் என்று விரும்புகின்றனர். எனக்கும் முதல்வராக ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு பெரும்பான்மை பலத்தை எட்ட வேண்டும். எல்லோருடைய ஆசையும்
நிறைவேறாது.
அஜித் பவார்
மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,

