நக்சலைட் தாக்குதல் வேரோடு பிடுங்கி எறியப்படும்: அமித்ஷா தருகிறார் உத்தரவாதம்
நக்சலைட் தாக்குதல் வேரோடு பிடுங்கி எறியப்படும்: அமித்ஷா தருகிறார் உத்தரவாதம்
ADDED : மே 01, 2024 02:56 PM

ராய்ப்பூர்: 2 ஆண்டுகளில் சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதல் வேரோடு பிடுங்கி எறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நக்சலைட் தாக்குதல் ஊக்குவிக்கப் பட்டது. விஷ்ணு தியோ சாய் தலைமையில் எங்கள் அரசு அமைந்த உடன், 4 மாதங்களில் 95 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் கைது செய்யப்பட்டனர். பலர் சரணடைந்தனர். மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்குங்கள். 2 ஆண்டுகளில் சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதல் வேரோடு பிடுங்கி எறியப்படும்.
500 ஆண்டுகள்
பீஹார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நக்சலைட் தாக்குதலை பிரதமர் மோடி ஒழித்துவிட்டார் என்று சொல்ல விரும்புகிறேன். 500 ஆண்டுகளுக்குப் பிறகு, ராமரின் நெற்றியில் சூரிய ஒளி விழுந்த காட்சியை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை, காங்கிரஸ் தனது ஓட்டு வங்கிக்கு பயந்து நிராகரித்தது.
இடஒதுக்கீடு
பார்லிமென்டில் பா.ஜ.,வின் ஒரு எம்பி இருக்கும் வரை, நாங்கள் எஸ்டி, எஸ்சி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை நீக்க மாட்டோம். காங்கிரசையும் அகற்ற அனுமதிக்க மாட்டோம். இது மோடியின் உத்தரவாதம்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்த நாட்டில் பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தையும் நக்சலிசத்தையும் வளர்த்து வருகிறது காங்கிரஸ். ஆனால் இப்போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இவ்வாறு அமித்ஷா பேசினார்.