ஷிவமொகாவில் நக்சல்கள்? வதந்தி என எஸ்.பி., விளக்கம்!
ஷிவமொகாவில் நக்சல்கள்? வதந்தி என எஸ்.பி., விளக்கம்!
ADDED : ஏப் 23, 2024 05:52 AM

ஷிவமொகா : ''ஷிவமொகாவில் நக்சலைட்களின் நடமாட்டம் இல்லை. பொய் செய்தி பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எஸ்.பி., மிதுன் குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஷிவமொகாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஷிவமொகா - உடுப்பி மாவட்டங்களின் எல்லையான ஹொசகொப்பா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரத்தி கிராமத்தில், புதிதாக நான்கு பேர் சுற்றித்திரிவதாக, மூன்று நாட்களுக்கு முன் தகவல்கள் பரவின.
உடனடியாக கார்கால் போலீசார், சாகர் ரூரல் போலீசார் சென்று விசாரித்தனர். இத்துடன், ஷிவமொகா நுண்ணறிவு துறை துணை எஸ்.பி., சென்று ஆய்வு செய்தார். மேலும், நக்சல் ஒழிப்பு படையினரும் சென்றனர். ஆனால் யாருக்கும் நக்சல் நடமாட்டம் குறித்தோ, அவர்கள் இருந்ததற்கான தடயமோ கிடைக்கவில்லை.
தவறான செய்தி பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

