ஹரியானா முதல்வராக பதவியேற்றார் நயாப் சைனி; பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு
ஹரியானா முதல்வராக பதவியேற்றார் நயாப் சைனி; பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : அக் 17, 2024 01:27 PM

சண்டிகர்: 2வது முறையாக, ஹரியானா மாநில முதல்வராக இன்று(அக்.,17) நயாப் சிங் சைனி பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பண்டாரு தாத்தரேயா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஹரியானாவில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக, அக்.,5ம் தேதி நடந்தது. அக்.,8ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 45 இடங்கள் தேவை என்ற நிலையில், 48 இடங்களில் அக்கட்சி வென்று சாதனை படைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற இருவர் உட்பட மூன்று பேர், பா.ஜ.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் வாயிலாக, பா.ஜ.,வின் பலம் 51 ஆக அதிகரித்து உள்ளது.
ஆட்சியை பிடிக்க, உழைத்த நயாப் சிங் சைனி ஹரியானா மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். டில்லி சென்ற நயாப் சிங் சைனி, பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றார். இந்நிலையில், இன்று(அக்.,17) 2வது முறையாக, ஹரியானா மாநில முதல்வராக இன்று(அக்.,17) நயாப் சிங் சைனி பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பண்டாரு தாத்தரேயா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நட்டா, பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
அமைச்சர்கள் பதவியேற்பு
அனில் விஜ், கிருஷ்ண பேடி, கிருஷ்ணலால் பன்வார், அரவிந்த் சர்மா, கிருஷ்ணா மித்தா, மஹிபால் தண்டா, மூல் சந்த் சர்மா, லக்ஷ்மன் யாதவ், ராவ் நர்பீர், சுனில் சங்வான், பிபுல் கோயல், தேஜ்பால் தன்வார் ஆகிய 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.