ADDED : ஆக 15, 2024 07:59 PM
பகர்கஞ்ச்:'இன்று நடைபெறும் என்.டி.எம்.சி., எனும் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களின் பணியிடங்களை முறைப்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்படும்' என, முனிசிபல் கவுன்சில் துணைத் தலைவர் சதீஷ் உபாத்யாய் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
இன்று நடைபெறும் என்.டி.எம்.சி., எனும் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களின் பணியிடங்களை முறைப்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்படும்.
புதுடில்லி எம்.பி., பன்சூரி ஸ்வராஜ், என்.டி.எம்.சி.,யின் தலைவர் நரேஷ் குமார் மற்றும் பிற உறுப்பினர்கள் பங்கேற்ற முந்தைய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்த கூட்டத்தில், ஒப்பந்த ஊழியர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஆள்சேர்ப்பு விதிகளில் திருத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.