ADDED : ஜூலை 13, 2024 01:34 AM
காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தில் அரசியல் குழப்பங்கள் மிகவும் சாதாரணம். மொத்தம், 275 உறுப்பினர்கள் உள்ள பார்லிமென்டில் ஷேக் பகதூர் துபா தலைமையிலான நேபாள காங்கிரசுக்கு, 89 உறுப்பினர்கள் உள்ளனர்.
கே.பி. சர்மா ஒலியின், சி.பி.என்., -- யு.எம்.எல்., கட்சிக்கு, 76 எம்.பி.,க்கள் உள்ளனர். அதே நேரத்தில் பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டாவின் நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் சென்டர் கட்சிக்கு, 32 எம்.பி.,க்கள் உள்ளனர்.
தற்போது நேபாளத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. ஷேர் பகதுார் துபா மற்றும் சர்மா ஒலி மீண்டும் கைகோர்த்துள்ளனர்.
இதனால், பிரசண்டா தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கை ஓட்டெடுப்பு அந்நாட்டின் பார்லிமென்டில் நேற்று நடந்தது.
இதில், மொத்தம் 275 உறுப்பினர்களில் பிரசண்டாவுக்கு ஆதரவாக 63 ஓட்டுகளும், எதிராக 194 ஓட்டுகளும் பதிவாகின.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரசண்டா தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து சர்மா ஒலி, விரைவில் அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.

