ADDED : ஜூலை 09, 2024 04:17 AM
கோனனகுன்டே, : நேபாளத்தை சேர்ந்தவர் பாலாஜி, 43. சில ஆண்டுகளுக்கு முன், பெங்களூரு வந்தார். இவரது தாய், தந்தை நேபாளத்தில் வசிக்கின்றனர். பாலாஜி வெல்டிங் மற்றும் கூலி வேலை செய்து வந்தார்.
வீடு இருந்தும் அங்கு செல்லாமல், இரவு நேரத்தில் கிடைத்த இடங்களில் படுத்து உறங்குவார். நேற்று முன்தினம், இரவு 11:30 மணியளவில் கோனனகுன்டே சமுதாய பவன் அருகில், சென்று கொண்டிருந்த போது, சில நபர்களுடன் ஏதோ காரணத்தால் தகராறு ஏற்பட்டது.
கோபத்தில் அவர்கள், பாலாஜியின் தலையில் உருட்டு கட்டையால் ஓங்கி அடித்துவிட்டு தப்பியோடினர்.
இதை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கோனனகுன்டே போலீசார், ரத்த காயங்களுடன் கிடந்த பாலாஜியை, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், அவர் உயிரிழந்தார்.
கொலையாளிகளை தேடி வருகின்றனர்.