லோக்சபாவில் புதிய விமான மசோதா அறிமுகம்: 90 ஆண்டு சட்டத்திற்கு முடிவு
லோக்சபாவில் புதிய விமான மசோதா அறிமுகம்: 90 ஆண்டு சட்டத்திற்கு முடிவு
ADDED : ஆக 01, 2024 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடெல்லி: விமான போக்குவரத்து விதிமுறைகளை மாற்றி அமைப்பதற்காக புதிய விமான மசோதா நேற்று பார்லிமென்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் விமான சட்டம் 1934-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு அதன் விதிகளின் படி செயல்பட்டு வருகிறது.
இதனை முற்றிலும் மாற்றி அமைத்து புதிய விதிமுறைகளுடன் ‛‛பாரதிய வாயுயான் விதேயக்'' என்ற பெயரில் புதிய மசோதா நேற்று பார்லிமென்ட் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
இதன் மூலம் 90 ஆண்டுகள் அமலில் இருந்த விமான சட்டத்திற்கு முடிவு எட்டப்பட உள்ளது.
வழக்கம் போல இந்த மசோதா ஹிந்தியில் பெயர் உள்ளதாக கூறி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.