'நாளிதழ் வினியோகிப்பாளர் நண்பர்' : முதல்வர் சித்தராமையாவுக்கு விருது
'நாளிதழ் வினியோகிப்பாளர் நண்பர்' : முதல்வர் சித்தராமையாவுக்கு விருது
ADDED : செப் 14, 2024 11:45 PM

பெங்களூரு : நாளிதழ் வினியோகிப்பாளர்களுக்கு அரசு செய்து வரும் திட்டங்களுக்காக, கர்நாடக நாளிதழ் வினியோகிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில், முதல்வர் சித்தராமையாவுக்கு, 'நாளிதழ் வினியோகிப்பாளர் நண்பர்' விருது நேற்று வழங்கப்பட்டது.
கர்நாடக நாளிதழ் வினியோகிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சமீபத்தில், சித்ரதுர்காவில், 4வது மாநில மாநாடு நடந்தது. மாநாட்டை முதல்வர் சித்தராமையா துவக்கி வைப்பதாக இருந்தது.
முதல்வர் வர முடியாததால், முதல்வரின் ஊடக செயலர் பிரபாகர் துவக்கி வைத்தார்.
மாநாட்டில், முதல்வருக்கு நாளிதழ் வினியோகிப்பாளர் நண்பர் விருது வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர் பங்கேற்காததால், பெங்களூரு காவிரி இல்லத்தில், கர்நாடக நாளிதழ் வினியோகிப்பாளர்கள் கூட்டமைப்பு தலைவர் சம்புலிங்கா நேற்று முதல்வர் சித்தராமையாவிடம், விருது வழங்கினார்.
நாளிதழ் வினியோகிப்பாளர்களுக்கு அரசு செய்து வரும் திட்டங்களுக்காக, இந்த விருது வழங்கப்பட்டதாக, கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மாநில பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் சிவானந்த தகடூர், காங்கிரஸ் எம்.எல்.சி., கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.