மாதவிக்கு பணி ஓய்வுக்கு பின் ஊதியமோ, சலுகைகளோ வழங்கவில்லை: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி விளக்கம்
மாதவிக்கு பணி ஓய்வுக்கு பின் ஊதியமோ, சலுகைகளோ வழங்கவில்லை: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி விளக்கம்
ADDED : செப் 02, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செபி தலைவர் மாதவி புரி புச், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், அவருக்கு ஊதியமோ, சலுகைகளோ வழங்கப்படவில்லை என, அவ்வங்கி விளக்கம் அளித்துள்ளது. 2013 அக்டோபர் 31ம் தேதியோடு, மாதவி, தங்கள் வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாகவும், அதன் பின் வங்கியின் விதிகளின்படி ஓய்வூதிய பலன்கள் மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டதாகவும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
செபி தலைவர் மாதவி, 2017 முதல் ஐ.சி.ஐ.சி.ஐ. குழுமத்திடம் இருந்து 16.80 கோடி ரூபாய் பெற்றதாகவும், இது செபி தலைவர் பதவிக்கான அவரது ஊதியத்தைவிட 5.09 மடங்கு அதிகம் என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.