ADDED : ஜன 25, 2026 06:59 AM

நொய்டா: நொய்டா ஆணைய தலைமை செயல் அதிகாரியாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கிருஷ்ணா கருணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரேட்டர் நொய்டா 150வது செக்டாரில், 16ம் தேதி கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து சாப்ட்வேர் இன்ஜினியர் யுவராத் மேத்தா,27, உயிரிழந்தார். சாலை மோசமான நிலையில் இருந்ததாலும், கால்வாய் சுற்றுச் சுவரில் ஏற்பட்டு இருந்த சேதத்தாலும் இந்த விபத்து நிகழ்ந்ததாக நொய்டாவாசிகள் போராட்டம் நடத்தினர்.
மேலும், கால்வாய் சுற்றுச்சுவரை சீரமைக்கக் கோரி பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, நொய்டா ஆணையத்தின் இளநிலை பொறியாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், நொய்டா ஆணைய தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.லோகேஷ், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், நொய்டா ஆணைய தலைமைச் செயல் அதிகாரியாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கிருஷ்ணா கருணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

