ஒரு ஓட்டு கூட அவர்களுக்கு ஆதரவாக விழக்கூடாது: கெஜ்ரிவால் பேச்சு
ஒரு ஓட்டு கூட அவர்களுக்கு ஆதரவாக விழக்கூடாது: கெஜ்ரிவால் பேச்சு
ADDED : மே 28, 2024 02:51 PM

புதுடில்லி: 'ஒரு ஓட்டு கூட பா.ஜ.,வுக்கு ஆதரவாக விழக் கூடாது' என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது: ஆம்ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்த உடன் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினோம். நாங்கள் மின்சாரத்தை இலவசமாக்கினோம். நிதி ரீதியாக மோசமான சூழ்நிலை இருந்தது. ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் மட்டுமே இலவச மின்சாரம் வழங்குகின்றன. இன்று, நான் உங்களிடம் ஓட்டு கேட்க வந்துள்ளேன். மத்தியில் நாம் பலவீனமாக இருக்கிறோம்.
சர்வாதிகாரம்
மத்தியில் ஆட்சி அமைந்தால் நமது கைகள் வலுவடையும். எனவே ஆம் ஆத்மி கட்சியை 13 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும். நாட்டில் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு பஞ்சாப் அரசு ஒழிக்கப்படும். பஞ்சாப் முதல்வரை பதவியில் இருந்து நீக்குவோம் என அமித்ஷா மிரட்டியுள்ளார்.
அவர்கள் இலவச மின்சாரத்தை நிறுத்த முடிவு செய்துள்ளார்கள். எனவே, ஒரு ஓட்டு கூட பா.ஜ.,வுக்கு ஆதரவாக விழக்கூடாது. அனைத்து ஓட்டுகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக போடப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.