பேரழிவின் போது ஒரு ரூபாய் கூட நிதியுதவி வழங்கவில்லை: பிரியங்கா குற்றச்சாட்டு
பேரழிவின் போது ஒரு ரூபாய் கூட நிதியுதவி வழங்கவில்லை: பிரியங்கா குற்றச்சாட்டு
ADDED : மே 28, 2024 12:41 PM

சிம்லா: 'ஹிமாச்சலப் பிரதேசத்தில் பேரழிவு ஏற்பட்ட போது, மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதியுதவி வழங்கவில்லை' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
ஹமாச்சல் பிரதேசம் ஹமிர்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் பிரயங்கா பேசியதாவது: ஹமிர்பூர் தொகுதி எம்.பி.யை பார்க்க முடியுமா?. டில்லியில் உள்ள ஹோட்டல்களில் பெரிய தொழிலதிபர்களை சந்திப்பதில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். மக்களை சந்திக்க வருவாரா?. பிரதமர் மோடி கூட தனது தொகுதியான வாரணாசியில் மக்களை சந்திக்க செல்வதில்லை. நான் சென்று வருகிறேன்.
சித்தாந்தம்
வாரணாசியில் பிரதமர் மோடி எந்த கிராமத்திற்கும் சென்றது இல்லை. பா.ஜ.,வின் அரசியல் சித்தாந்தம் முற்றிலும் மாறுப்பட்டது. நான் எங்கு சென்றாலும், மக்கள் என்னை சந்திக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹிமாச்சலில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களும் மக்களுக்கு சேவை செய்துள்ளனர். ஹிமாச்சலப் பிரதேசத்தில் பேரழிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.
பேரழிவு
மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதியுதவி வழங்கவில்லை. பேரழிவின் போது ஒரு பா.ஜ., தலைவர் கூட நேரில் வந்து மக்களை பார்க்கவில்லை. காங்கிரஸ் அரசு அனைத்து செலவுகளையும் ஏற்று மக்களுக்கு நிவாரணம் வழங்கியது. நாங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயன்ற போது, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் எங்கள் ஆட்சியை வீழ்த்துவதில் மும்முரமாக இருந்தனர். இவ்வாறு அவர் பேசினார்.

