உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 17, 2024 11:21 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: மேற்கு வங்க மாநிலம் தம்லுக் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக, கோல்கட்டா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் போட்டியிடுகிறார்.
இதையொட்டி கடந்த 15ல் ஹால்டியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித், முதல்வர் மம்தா பானர்ஜியை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது.
அபிஜித் மீது நடவடிக்கை எடுக்கும்படி, திரிணமுல் காங்., நிர்வாகிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, பா.ஜ., வேட்பாளர் அபிஜித்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
அதில், 'முதல்வர் மம்தா குறித்து அபிஜித் தெரிவித்த கருத்து முறையற்றது. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய இந்த குற்றச்சாட்டு தொடர்பாக வரும் 20ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப் பட்டுள்ளது.
