ஐயோ தாங்க முடியலப்பா..! ஒரே வாரத்தில் 4வது பாலம் "டமால்": பீஹாரில் அடுத்தடுத்து அதிர்ச்சி
ஐயோ தாங்க முடியலப்பா..! ஒரே வாரத்தில் 4வது பாலம் "டமால்": பீஹாரில் அடுத்தடுத்து அதிர்ச்சி
UPDATED : ஜூன் 27, 2024 04:58 PM
ADDED : ஜூன் 27, 2024 04:44 PM

பாட்னா: பீஹார் மாநிலத்தில் கன்காய் ஆற்றில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. ஏற்கனவே மூன்று பாலங்கள் இடிந்து விழுந்தன. ஒரே வாரத்தில் நான்கு பாலங்கள் இடிந்து விழுந்தது பீஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கன்காய் ஆற்றில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால், பாலத்தின் தூண்கள் சேதமடைந்தது. இதனால் 2011ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம், இன்று (ஜூன் 27) இடிந்து தரைமட்டமானது. இந்த பாலம் 70 மீட்டர் நீளம் உடையது.
சில தினங்களுக்கு முன்பு, சம்கரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹரி பகுதியில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த சிறிய பாலம் இடிந்து விழுந்தது. அராரியா பகுதியில் பக்ரா ஆற்றின் மீது, 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருந்த பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது.
இதேபோல் சிவான் மாவட்டத்தில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது. ஒரே வாரத்தில் 4 பாலங்கள் இடிந்து விழுந்தது, பீஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.