இந்தியா கூட்டணி சார்பில் நாளை பார்லி., முன் போராட்டம்
இந்தியா கூட்டணி சார்பில் நாளை பார்லி., முன் போராட்டம்
UPDATED : ஜூலை 23, 2024 07:21 PM
ADDED : ஜூலை 23, 2024 07:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இண்டியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு பட்ஜெட் நிதி ஒதுக்காததை கண்டித்து நாளை பார்லி.,யில் போராட்டம் நடத்த இண்டியா கூட்டணி முடிவு செய்துள்ளது.
பார்லி.,யில் இன்று ( 23.07.2024) மத்தியநிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் இண்டியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கவில்லை என இண்டியா கூட்டணி கட்சிகள் கருத்து தெரிவித்தன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாளை (24.07.2024) பார்லி.,யில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நாளை பார்லிமென்ட் முன்பு இண்டியா கூட்டணி நாளை போராட்டம் நடத்த உள்ளது.