ADDED : ஏப் 14, 2024 09:50 PM
பெங்களூரு : ஐ.பி.எல்., கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடப்பதால், ரசிகர்கள் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.
இது பற்றி, பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 15, மே 4, 12, 18ம் தேதி பெங்களூரில் நடக்கவுள்ளன. ரசிகர்களின் வசதிக்காக, கிரிக்கெட் போட்டி நடக்கும் நாட்களில், கூடுதல் பஸ் இயக்க பி.எம்.டி.சி., முன் வந்துள்ளது.
போட்டி நடக்கும் சின்னசாமி விளையாட்டு அரங்கில் இருந்து, எச்.ஏ.எல்., சாலை வழியாக, காடுகோடி பஸ் நிலையம்; ஹூடி சாலை வழியாக காடுகோடி பஸ் நிலையம்; ஓசூர் சாலை வழியாக எலக்ட்ரானிக் சிட்டி.
நாகவாரா - டேனரி சாலை வழியாக ஆர்.கே.ஹெக்டே நகர்; மாகடி சாலை வழியாக ஜனப்பிரியா டவுன்ஷிப்; எம்.டி.சி.டி., - நாயண்டஹள்ளி வழியாக, கெங்கேரி கே.ஹெச்.பி., குடியிருப்பு; ஹென்னுார் சாலை வழியாக பாகலுாருக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
சர்ஜாபுரா, பன்னரகட்டா மிருகக்காட்சி சாலை, நெலமங்களா, எலஹங்கா 5வது ஸ்டேஜ், ஹொஸ்கோட் பகுதிகளுக்கும் கூடுதல் பஸ் வசதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

