ஜி.எஸ்.டி.,க்கு எதிர்ப்பு; பார்லி., முன் ராகுல் போராட்டம்
ஜி.எஸ்.டி.,க்கு எதிர்ப்பு; பார்லி., முன் ராகுல் போராட்டம்
ADDED : ஆக 06, 2024 11:28 AM

புதுடில்லி: ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு பிரீமியத்தின் மீதான ஜி.எஸ்.டி., வரியை திரும்பப் பெறக் கோரி, பார்லிமென்டிற்கு வெளியே காங்., எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் போராட்டம் நடத்தினார்.
ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் இரண்டுக்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஜி,எஸ்.டி.,யை திரும்ப பெற வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தனர். ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் நிதின் கட்கரியே குரல் கொடுத்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களும் கோரிக்கையை வலியுறுத்த துவங்கினர்.
போராட்டம்
இன்று (ஆகஸ்ட் 06) கோரிக்கையை வலியுறுத்தி, பார்லிமென்டிற்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் போராட்டம் நடத்தினார். அவருடன் காங்கிரஸ் எம்.பி.,க்கள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களும் சேர்ந்து கொண்டனர். கோரிக்கை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியபடி ராகுல் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.