ADDED : ஜூலை 14, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இன்று முதல் 16ம் தேதி வரை மலப்புரம், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோட்டில் பலத்த மழை பெய்வதற்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மாவட்டங்களில், 20 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
கேரளாவின் பல பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.