தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஏழு மாவட்டங்களில் 'ஆரஞ்சு அலெர்ட்'

ஏழு மாவட்டங்களில் 'ஆரஞ்சு அலெர்ட்'

ஏழு மாவட்டங்களில் 'ஆரஞ்சு அலெர்ட்'


ADDED : ஆக 25, 2024 08:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2024 08:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவின் ஏழு மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்சு அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தொடர்கிறது. உடுப்பி, உத்தர கன்னடா, பெலகாவி, கலபுராகி, விஜயபுரா, யாதகிரி, சிவமொகா ஆகிய மாவட்டங்களில், நாளை (இன்று) கன மழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே இம்மாவட்டங்களில், 'ஆரஞ்சு அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

தட்சிண கன்னடா, பாகல்கோட், ராய்ச்சூர், சிக்கமகளூரு மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டமான உடுப்பியில், 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் சுழற்காற்று வீசும் வாய்ப்புள்ளது. விஜயபுரா, கலபுரகி, யாத்கிர், பெலகாவி, ஷிவமொகா மாவட்டங்களில், மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சுழற்காற்று வீசும்.

தட்சிணகன்னடா மாவட்டத்தில், பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யலாம். ராய்ச்சூர், பாகல்கோட், சிக்கமகளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தாவணகெரே, சித்ரதுர்கா, பல்லாரியில் லேசான மழை பெய்யும்.

பெங்களூரு நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், மேகமூட்டமான வானிலை இருக்கும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஷியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்ஷியஸ் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us