உடல் உறுப்பு மாற்று சிகிச்சை: காத்திருக்கும் இளைஞர்கள்
உடல் உறுப்பு மாற்று சிகிச்சை: காத்திருக்கும் இளைஞர்கள்
ADDED : செப் 09, 2024 04:42 AM
பெங்களூரு : இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.
அதிநவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதால், மனிதர்களின் வாழ்க்கை நடைமுறை, உணவு பழக்கம் மாறியுள்ளது. இது, அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், சிறு வயது இளைஞர்கள், இளம்பெண்களுக்கு கல்லீரல், சிறுநீரகம் பிரச்னை அதிகரிக்கிறது.
குறிப்பாக பணியாற்றி, குடும்பத்துக்கு துாணாக விளங்கும் 19 வயது முதல் 40 வயது வரையிலான இளைஞர்கள், இளம்பெண்கள் உடல் உறுப்புகள் பழுதடைந்து பலியாகின்றனர்.
பணிச்சுமை, மன அழுத்தத்தால் உடல் உறுப்புகள் பிரச்னை அதிகரிக்கிறது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்களுக்கு கல்லீரல், சிறுநீரகம் பிரச்னை ஏற்படுகிறது. உறுப்பு தானம் பெற, பதிவு செய்து கொள்கின்றனர்.
கர்நாடகாவில் உடல் உறுப்புகளுக்கு, தேவை அதிகரித்துள்ள நிலையில், உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகமாவது ஆறுதலான விஷயமாகும். உடல் உறுப்பு தானத்தில் கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். இளம் தலைமுறையினர் தீய பழக்கங்களில் இருந்து விலகி இருந்தால், உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றலாம்.
....பாக்ஸ்....
உடல் உறுப்புகள் தேவை விபரம்
* சிறுநீரகம் - 5,974
* கல்லீரல் - 2,221
* நுரையீரல் - 78
* இதயம் - 194
=======
* எந்தெந்த வயதினருக்கு, என்ன உறுப்புகள் தேவை:
1 முதல் 10 வயது:
* சிறுநீரகம்- 75
* கல்லீரல் - 87
* நுரையீரல் - 2
* இதயம் - 33
================
19 முதல் 40
* சிறுநீரகம் - 1,713
* கல்லீரல் - 1,450
* நுரையீரல் - 19
* இதயம் - 64
================
41 முதல் 60 வயது வரை
* சிறுநீரகம் - 1,368
* கல்லீரல் - 1,212
* நுரையீரல் - 27
* இதயம்- 71
=================
60 வயதுக்கு மேற்பட்டோர்
* சிறுநீரகம் - 1,118
* கல்லீரல் - 688
* நுரையீரல் - 30
* இதயம் - 26
***