ADDED : ஏப் 27, 2024 11:26 PM

உத்தர கன்னடா,: மரக்கன்றுகள் நட்டதற்காக 'பத்மஸ்ரீ' விருது பெற்ற துளசி கவுடா, முதுமை, மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தர கன்னடா மாவட்டம், அங்கோலாவின் ஹொன்னாலி கிராமத்தை சேர்ந்தவர் துளசி கவுடா, 86. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், தன் வாழ்நாளில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
இவர் 'வன கலைக்களஞ்சியம்' என்றும் அழைக்கப்படுகிறார். அத்துடன் மரத்தின் குணம், அதன் வகையை அடையாளம் காணுவதில் திறமை கொண்டவர். இவரின் சேவையை பாராட்டி, 2020ல் அவருக்கு 'பத்மஸ்ரீ' விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது.
வயது முதிர்வு, சுவாச பிரச்னையாலும் அவதிப்பட்டு வந்த துளசி கவுடா, உத்தர கன்னடா கிம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர்.

