போதை பார்ட்டியில் பங்கேற்பு மூன்று ஏட்டுகள் சஸ்பெண்ட்
போதை பார்ட்டியில் பங்கேற்பு மூன்று ஏட்டுகள் சஸ்பெண்ட்
ADDED : ஆக 17, 2024 11:02 PM
பெங்களூரு: தொழிலதிபரின் பிறந்த நாள் பார்ட்டியில் பங்கேற்றதுடன், போதைப்பொருள் பயன்படுத்திய மூன்று ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு புறநகரின் வில்லா ஒன்றில், சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரின் பிறந்த நாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நள்ளிரவை தாண்டியும் பார்ட்டி நடந்துள்ளது. அங்கு கஞ்சா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த சிக்கஜாலா போலீசார், வில்லாவுக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது இந்த பார்ட்டியில், சேஷாத்ரிபுரம் துணைப்பிரிவு ஏ.சி.பி., அலுவலக தலைமை ஏட்டு ஆனந்தகுமார், ஜீவன்பீமநகர் போலீஸ் நிலைய தலைமை ஏட்டு மஞ்சுநாத், உப்பார்பேட் போலீஸ் நிலைய ஏட்டு, அனந்தராஜு ஆகியோர் பங்கேற்றது தெரிந்தது.
இதுகுறித்து, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானது.
எனவே மூவரையும் சஸ்பெண்ட் செய்து, நேற்று முன் தினம் நகர போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டார்.

