கொச்சியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணிக்கு "காப்பு"
கொச்சியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணிக்கு "காப்பு"
ADDED : ஜூன் 25, 2024 01:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொச்சி: கேரளா மாநிலம் கொச்சியில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்திய விமானம் இன்று(ஜூன் 25) லண்டனுக்கு செல்ல இருந்தது. இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மும்பையில் உள்ள விமான சேவை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் விமானம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகப்படும் படியான எந்த பொருளும் கிடைக்காததால் விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. பின்னர் விமானம் லண்டன் நோக்கி புறப்பட்டு சென்றது. விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.