ADDED : மே 09, 2024 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:டில்லி மெட்ரோ ரயில் வயலட் வழித்தடத்தில் நேற்று தாமதம் ஏற்பட்டதால், பயணியர் தவித்தனர். .
டில்லி மெட்ரோ ரயில் பாதையில் சரிதா விஹார் - மோகன் எஸ்டேட் இடையில் நேற்று தாமதம் ஏற்பட்டது. மற்ற வழித்தடங்களில் பாதிப்பு ஏதும் இன்றி வழக்கம்போல் ரயில்கள் இயங்கின.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் இயக்குவதில் தடை ஏற்பட்டதால், ஏராளமான பயணியர் தவித்தனர்.
மத்திய டில்லியின் காஷ்மீர் கேட் மற்றும் ஹரியானா மாநிலம் பரிதாபாத் வரை வயலட் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஒரு மணி நேரத்துக்குப் பின், கோளாறு சரிசெய்யப்பட்டு ரயில்கள் வழக்கம்போல் இயங்கின.