ADDED : செப் 08, 2024 06:54 AM
பெங்களூரு: பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் அமைத்திருந்த கார்னர் வீட்டுமனைகள் அனைத்தும் விற்று முடிந்ததால், அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பி.டி.ஏ., உயர் அதிகாரிகள் கூறியதாவது:
பி.டி.ஏ., வீட்டு மனைகளுக்கு, அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கார்னர் மனைகளை விரும்பி வாங்குகின்றனர். 76 கார்னர் மனைகளை விற்பனைக்கு வைத்திருந்தது.
அனைத்து மனைகளும் விற்று முடிந்துள்ளன. இதனால் 93.29 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
ஏலம் மூலம் மனைகள் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 5 வரை விற்கப்பட்டன.
யல்லிகுன்டேவின் ஹெச்.எஸ்.ஆர்., லே -- அவுட்டின், மூன்றாவது செக்டரில் 2,136 சதுர அடி பரப்பளவுள்ள மனை, 6.29 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
அஞ்சனாபுரா டவுன் ஷிப்பின், ஈஸ்ட் பிளாக், இரண்டாவது, மூன்றாவது, ஏழாவது பிளாக், 10வது பிளாக், பனசங்கரி 5வது ஸ்டேஜில் கார்னர் மனைகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒன்பது மனைகள் விற்பனைக்கு உள்ளன. இவையும் ஏலத்தில் விற்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.