sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்., - மதுரை 'வந்தே பாரத்' கே.ஆர்.புரத்தில் நேரம் மாற்றம்

/

பெங்., - மதுரை 'வந்தே பாரத்' கே.ஆர்.புரத்தில் நேரம் மாற்றம்

பெங்., - மதுரை 'வந்தே பாரத்' கே.ஆர்.புரத்தில் நேரம் மாற்றம்

பெங்., - மதுரை 'வந்தே பாரத்' கே.ஆர்.புரத்தில் நேரம் மாற்றம்


ADDED : செப் 03, 2024 10:49 PM

Google News

ADDED : செப் 03, 2024 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'கிழக்கு கடலோர ரயில்வே பயணியர் வசதிக்காக, புவனேஸ்வர் - பெலகாவி - புவனேஸ்வர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது,' என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: ரயில் எண் 02813: புவனேஸ்வர் - பெலகாவி ரயில், சனிக்கிழமை தோறும் செப்., 7, 14, 21, 28ம் தேதிகளில் புவனேஸ்வரில் இருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை அதிகாலை 3:00 மணிக்கு பெலகாவி வந்தடையும்.

மறுமார்க்கத்தில், ரயில் எண் 02814: பெலகாவி - புவனேஸ்வர் ரயில், திங்கட்கிழமை தோறும் செப்., 9, 16, 23, 30ம் தேதிகளில், பெலகாவியில் இருந்து காலை 7:30 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய் கிழமை மதியம் 2:30 மணிக்கு புவனேஸ்வர் சென்றடையும்.

நேரம் மாற்றம்


ரயில் எண்: 20671 மதுரை - பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில், கே.ஆர்.,புரம் ரயில் நிலையத்தில் இனி மதியம் 12:30 மணிக்கு வந்து, 12:32 மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 20672 பெங்களூரு கன்டோன்மென்ட்-மதுரை வந்தே பாரத் ரயில், கே.ஆர்.,புரத்தில் 1:43 மணிக்கு வந்து, 1:45க்கு புறப்படும்.

நீட்டிப்பு


ரயில் எண் 07377: விஜயபுரா - மங்களூரு சென்ட்ரல் தினசரி ரயில், டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செப்., 30ம் தேதி வரை இருந்தது.

மறு மார்க்கத்தில் எண் 07378: மங்களூரு சென்ட்ரல் - விஜயபுரா தினசரி ரயில், 2025 ஜனவரி 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்., 1ம் தேதி வரை இருந்தது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us